1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A son killed his father in family problem

தந்தையை வெட்டிப் படுகொலை செய்த மகன் கைது

சிவகங்கை
சிவகங்கை அருகே குடும்பப் பிரச்னையில், தந்தையை வெட்டி படுகொலை செய்த மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு அறிவழகன் என்ற மகன் உள்ளார். அறிவழகன் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது.
 
சம்பவத்தன்று கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  மனைவியுடன் சண்டை போட்ட சேகர் வீட்டுவாசலில் உள்ள கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். தாயை திட்டித்தீர்த்த தந்தையை,  அறிவழகன் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார்.
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உயிரிழந்த சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அறிவழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தந்தையையே மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ராகுலை கலாய்த்த மோடி ; பதிலடி கொடுத்த சித்தராமய்யா