திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 1 மே 2018 (09:29 IST)

மணமேடையில் மணமகனை சுட்டுக்கொன்ற மணமகனின் நண்பன்

உத்திரபிரதேசத்தில் மணமகனின் நண்பனே மணமகனை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் கிராமத்தில் திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. வடமாநிலங்களில் திருமனத்தின் போது வானை நோக்கி துப்பாக்கியால் சுடுவது வழக்கம்.
 
இந்நிலையில் திருமணவிழாவிற்கு வந்த மணமகனின் நண்பர், துப்பாக்கியால் வானை நோக்கி சுடாமல், மணமகனை நோக்கி சுட்டுள்ளார். இதில் நெஞ்சில் குண்டுபாய்ந்து மணமகன் சம்பவ இடத்திலே பலியானார்.
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உயிரிழந்த மணமகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மணமகனின் நண்பனை கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணமகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.