1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 14 ஏப்ரல் 2018 (13:22 IST)

மாணவனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பாதிரியார் கைது

இங்கிலாந்தைப் சேர்ந்த பாதிரியார், பள்ளி மாணவனுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து வள்ளியூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனதன் ராபின்சன்(75) என்ற பாதிரியார், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகில் உள்ள சின்னம்மாள்புரத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு,  ‘கிரேயல் டிரஸ்ட்’ என்ற அமைப்பு மூலம் ஏழை, எளிய  மாணவ, மாணவிகளுக்கான விடுதி ஒன்றை உருவாக்கினார்.
 
இந்நிலையில் 2011-ம் ஆண்டில் பாதிரியார் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக காப்பகத்தில் தங்கியிருந்த 16 வயது மாணவன் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் பாதிரியார் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார்.
 
வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி, ஜோனதன் ராபின்சனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.