வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 15 மார்ச் 2018 (16:00 IST)

மாணவனை வகுப்பறையில் சிறை வைத்த ஆசிரியர்!

பள்ளியில் தூங்கி கொண்டிருந்த மாணவனை கவனிக்காமல் ஆசியர் வகுப்பறையில் பூட்டி சென்ற சமபவம் ஒன்று புதுவையில் அரங்கேறியுள்ளது.
 
புதுவை மாநிலத்தில் உள்ள திருக்கனுரில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வேல்முருகன் என்ற மாணவன் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் நேற்று வழக்கம் போல பள்ளிக்கு வந்துள்ளான். ஆனால், மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை.
 
இதனால் அந்த மாணவனின் பெற்றோர் பதட்டம் அடைந்துள்ளனர். அப்போது பள்ளியில் சுமார் மாலை 5.00 மணி அளவில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்டு பள்ளியில் அருகில் உள்ளவர்கள் போலீசார்க்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, போலீசார் பள்ளியில் இருக்கும் பூட்டை உடைத்து வகுப்பறையில் இருந்த மாணவனை மீட்டு அவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.