திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2018 (09:48 IST)

பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது மாணவன் கைது

மதுரையில் 17 வயது மாணவன் ஒருவன் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் இது போன்ற பாலியல் தொல்லைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 
 
மதுரை அழகிரி நகரில் பிளஸ்-2 மாணவி ஒருவர் பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு சென்றுள்ளார். மாணவி வீட்டில் தனியாக இருப்பதையறிந்த அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன், மாணவியின் வீட்டிற்கு சென்று கதவை பூட்டி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டார். இதனைத் தொடர்ந்து மாணவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
 
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது, புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது மாணவனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.