1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (11:04 IST)

துருக்கி பல்கலைகழகத்தில் துப்பாக்கிச் சூடு- மாணவனின் வெறிச்செயலுக்கு 4 பேர் பலி

துருக்கியில் உள்ள ஒஸ்மான்காசி பல்லகலைகழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒஸ்மான்காசி பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் நேற்று, அவர் மறைத்து வைத்திருந்த தூப்பாக்கியை எடுத்து திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி வெறித்தனமாக சுட்டுள்ளார்.
 
இதனால் அந்த பல்கலைகழக ஆசிரியர்கள், பணியாளர்கள் என நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அந்த மாணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.