1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 21 மார்ச் 2024 (08:30 IST)

மகனுடன் சென்று இளைஞரை தாக்கிய ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை.. போலீசில் புகார்..!

சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா தனது மகனுடன் சென்று இளைஞரை தாக்கியதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
முரளி மற்றும் வடிவேலு நடித்த சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் ராதா என்பதும் இவர் சென்னை விருகம்பாக்கத்தில் குடியிருக்கும் நிலையில் அவர் தனது மகனுடன் சென்று ரிச்சர்ட்ஸ் என்ற இளைஞரை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து ரிச்சர்ட்ஸ் தந்தை டேவிட் ராஜ்  புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த புகாரில் எனது மகன் பிரான்சிஸ் ரிச்சர்ட்ஸ் என்பவர் கடந்த 14ஆம் தேதி சாலிகிராமம் சாலை வழியாக சென்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த நடிகர் ராதா மற்றும் அவரது மகன் தருண் இருவரும் சேர்ந்து என் மகனை கடுமையாக தாக்கி உள்ளனர் என்றும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது நடிகை ராதாவை ரிச்சர்ட்ஸ் கிண்டல் செய்ததாகவும் அதற்காக தான் அவர் பழிவாங்கும் நடவடிக்கையாக தனது மகனுடன் சென்று தாக்கியதாகவும் தெரிகிறது. இது குறித்து இரு தரப்பினர்களிடம் காவல்துறையின் விசாரித்து வருகின்றனர்
 
Edited by Siva