வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 21 மார்ச் 2024 (08:03 IST)

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு: டெல்லி சென்றார் செல்வப்பெருந்தகை..!

Selvaperundagai
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை டெல்லி சென்று இருப்பதாகவும் டெல்லி தலைமையிடம் ஆலோசனை செய்து அதன்பின் வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது என்பதும் ஒரு சில சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் நேற்று திமுகவின் 21 வேட்பாளர்கள் உட்பட சில அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் 10 வேட்பாளர்கள் குறித்த உத்தேச பட்டியல் உடன் செல்வப்பெருந்தகை டெல்லி சென்று இருப்பதாகவும் இன்று மத்திய தேர்தல் குழு தலைவர்களுடன் அவர் ஆலோசனை செய்து இன்று இரவு வேட்பாளர் பட்டியல் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

எனவே இன்று மாலைக்கு பிறகு புதுவை உள்பட மொத்தம் பத்து தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva