1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 7 ஜனவரி 2023 (14:54 IST)

மதுரையில் 10 ஆயிரம் ஆண்கள் பங்கேற்ற கறிவிருந்து நிகழ்ச்சி!

madurai
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கருப்பையா முத்தையா கோவிலில் ஆண்களுக்கு மட்டும் கறி விருந்து  நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சொரிக்காம்பட்டி – எஸ் பெருமாள்கோவில்பட்டியில் கரும்பாறை முத்தையா சுவாமி கோயில் உள்ளது.

இந்த கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அசைவ அன்னதானம் நடக்கும்.

இதில், அந்த ஊர்களைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். இந்த நிலையில், 100 க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு, ஆண்களுக்கு விருந்து வைக்கப்பட்டது.

தடபுடலாக  நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சுமார் 10 ஆயிரம் ஆண்கள் பங்கேற்றதாக தகவல் வெளியாகிறது.