திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2022 (15:43 IST)

’துணிவா’ நின்னா வா பாத்துக்கலாம்..! விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்!

Varisu
வாரிசு, துணிவு படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ள நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

விஜய் நடித்து வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட தில் ராஜூ திட்டமிட்டுள்ளார்.

அதேசமயம் அஜித் நடித்து எச்.வினோத் இயக்கியுள்ள ‘துணிவு’ படமும் அதே பொங்கலை டார்கெட் செய்து வெளியாகிறது. இந்த படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் நிலையில் ஏற்கனவே திரையரங்குகள் பேசி முடிக்கப்பட்டு விட்டன.

நீண்ட காலம் கழித்து அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் அஜித், விஜய் ரசிகர்களிடையே யார் படம் வெற்றி பெறும் என்பதில் போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில் மதுரையில் போஸ்டர் ஒட்டியுள்ள விஜய் ரசிகர்கள் ‘பணிவா சொன்னா ஏத்துக்கலாம் துணிவா நின்னா வா பாத்துக்கலாம்” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை ஒட்டியுள்ளனர்.

வாரிசு, துணிவு ரிலீஸாகும் முன்னரே இருதரப்பு ரசிகர்களிடையேயும் போஸ்டர் யுத்தம் தொடங்கி பரபரப்பாகியுள்ளது.

Edit By Prasanth.K