திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 ஜனவரி 2023 (08:41 IST)

ஆவின் பணி நியமன முறைகேடு அம்பலம்?; 170 பேர் பணி நீக்கம்! – அதிரடி உத்தரவு!

மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக நேரடி பணி நியமனம் மூலம் சேர்ந்த பலர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களை மாநிலம் முழுவதும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினில் பணியில் சேர முறையான தேர்வு முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2020-2021ம் ஆண்டில் மதுரை ஆவினில் முறையான தேர்வு முறைகளை பின்பற்றாமலும், பணியிடங்கள் காலியாக இல்லாத நிலையிலும் கூடுதல் பணியாளர்களை நேரடியாக நியமித்தது குறித்து சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் முறைகேடாக நேரடி நியமனங்கள் நடைபெற்றது அம்பலமாகியுள்ள நிலையில் நேரடி நியமனங்கள் மூலம் பணி பெற்ற 170 பேரை பணிநீக்கம் செய்து ஆணையர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

Edit By Prasanth.K