வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2018 (14:27 IST)

அரசு பள்ளியில் புகுந்து தலைமை ஆசிரியையின் செயினை பறித்து சென்ற மர்ம நபர்

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர் தலைமை ஆசிரியை அணிந்திருந்த 8 சவரன் தாலி செயினை பறித்து தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் குற்றசம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிக்கும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே போகிறது. சென்னையில் இதுபோன்ற சபவங்கள் அரங்கேறுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில் சென்னை திருவள்ளூரில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவன், தலைமை ஆசிரியையின் 8 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினான். ஆசிரியைக்கு உதவ வந்த மாணவனையும் அந்த திருடன் அடித்துள்ளான்.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், திருட்டு சம்பவம் குறித்து விசாரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள போலீஸார் தப்பியோடிய திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர். பள்ளிக்கு உள்ளேயே சென்று ஆசிரியையின் செயினை திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.