திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 12 பிப்ரவரி 2018 (12:01 IST)

பேஸ்புக் பழக்கம் ; ஆசிரியையை ஏமாற்றி உல்லாசம் : வாலிபர் கைது

தனக்கு திருமணமானதை மறைத்து பள்ளி ஆசிரியருடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 
திருவண்ணாமலை சேர்ந்த ஷாலினி(30) என்பவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, கடந்த 2015ம் ஆண்டு பேஸ்புக் மூலம் ராணிப்பேட்டையை சேர்ந்த கோபிநாத்(32) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.
 
வெளிநாட்டில் வேலை செய்வதாக தன்னை காட்டிக் கொண்ட கோபிநாத், ஷாலினியுடன் நட்பாக பழகியுள்ளார். அதன் பின் அது காதலாக மாறியுள்ளது. அதைத் தொடர்ந்து செல்போனில் பேசியும், தனியாக சந்தித்து உல்லாசமாக இருப்பதுமாக அவர்கள் உறவை தொடர்ந்துள்ளனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் கோபிநாத்தின் செல்போனில் ஷாலினை அழைக்க அப்போது பேசிய ஒரு பெண் தான் கோபிநாத்தின் மனைவி எனக் கூறியுள்ளார். மேலும், கோபிநாத்துக்கு இரு குழந்தைகள் இருப்பதும் ஷாலினுக்கு தெரிய வந்துள்ளது.
 
இதுபற்றி கோபிநாத்திடம் ஷாலினி விசாரிக்க, இதுபற்றி பேசினால் நாம் ஒருவரும் உல்லாசமாக இருந்த படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். எனவே, ஷாலினி திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
 
இதைத்தொடர்ந்து, கோபிநாத்தை போலீசார் கைது செய்தனர்.