வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (11:55 IST)

டிராபிக் போலீஸாக மாறிய எம்.எல்.ஏ - குவியும் வாழ்த்துக்கள்

புதுச்சேரியில் எம்.எல்.ஏ ஒருவர் டிராபிக் போலீஸாக மாறி டிராபிக்கை க்ளியர் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் கொக்கு பார்க் சிக்னலில் நேற்று பயங்கர டிராபிக் நெரிசல் ஏற்பட்டது. அந்த டிராபிக்கை சீர் செய்ய போக்குவரத்து காவலரும் அங்கு இல்லை. 
 
இந்நிலையில் அங்கு வந்த என்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் தனது காரிலிருந்து இறங்கி போக்குவரத்து நெரிசலை கணக்கச்சிதமாக சீர் செய்தார். அரை மணி நேரத்தில் போக்குவரத்து நெரிசல் சீரானது.
 
எம்.எல்.ஏ இவ்வாறு செய்தது வேகமாக பரவி அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.