திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 1 ஆகஸ்ட் 2018 (14:37 IST)

அகதிகள் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் - பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

சட்டவிரோதமாக ஐதராபாத்தில் குடியேறியிருக்கும் அகதிகள் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ பேசியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பாஜகவை சேர்ந்த பிரமுகர்கள் சர்ச்சையாக பேசுவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா மாநிலம், கோஷமஹால் தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங், ஐதராபாத்தில் சட்ட விரோதமாக குடியிருக்கும் அகதிகளான ரோஹிங்கியா முஸ்லிம்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும். இல்லையென்றால் நாட்டிற்கே அவர்கள் தலைவலியாக மாறி விடுவார்கள். 
 
ஒருவேளை அவர்கள் வெளியேற மறுத்தால் அவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என கூறியுள்ளார். அவரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.