திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (08:09 IST)

அதிமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்: அதிர்ச்சியில் அதிமுக தலைமை

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ போஸ் என்பவர் மாரடைப்பால் இன்று திடீரென மரணம் அடைந்தார். இதனால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
 
திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ போஸ் அவர்களுக்கு திடீரென நேற்றிரவு நெஞ்சுவலி ஏற்பட்டதால், மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர், தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பே மரணம் அடைந்தார். அவருக்கு பதிலாக அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் போஸ் என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மறைந்த எம்எல்ஏ ஏ.கே.போஸ் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று பிற்பகல் 1 மணிக்கு நேரில் அஞ்சலி செலுத்துகிறார்.