திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 27 ஜூலை 2018 (20:27 IST)

ராகுல்காந்தியை கட்டிப்பிடித்தால் விவாகரத்துதான் : பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு

சமீபத்தில் பாராளுமன்றத்தில் நடந்த மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது ஆவேசமாக பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடியை திடீரென கட்டிப்பிடித்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
ராகுல்காந்தி கட்டிப்பிடித்ததை கடந்த சில நாட்களாக பாஜக பிரமுகர்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். அதற்கு ராகுல்காந்தியும் அவ்வப்போது பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது பதிலடி கொடுத்து வருகிறார். 
 
இந்த நிலையில் நிஷிகாந்த் துபே என்ற பாஜக எம்.பி ராகுல்காந்தியின் கட்டிப்பிடி சம்பவம் குறித்து கூறுகையில், 'காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜக எம்பிக்களாகிய நாங்கள் கட்டிப்பிடித்தால் எங்களின் மனைவிமார்கள் விவாகரத்து  செய்துவிடுவார்கள்' என்று கூறியுள்ளார். பாஜக எம்பியின் இந்த சர்ச்சை கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது