வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 24 ஏப்ரல் 2019 (17:23 IST)

3 மாத கைக்குழந்தை; மாமனார் - மருமகள் தகாத உறவு? இளைஞரின் வெறிச்செயல்!!!

திருவண்ணாமலையில் இளைஞர் ஒருவர் தனது தந்தை தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக சந்தேகித்து செய்த வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்(30). இவரது தந்தை தனபால். கார்த்திகேயனுக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவியும் 3 மாதத்தில் ஒரு குழந்தையும் இருந்தது.  தனது மனைவிக்கும் தன் தந்தை தனபாலுக்கும் தகாத உறவு இருப்பதாகவும் பிறந்த குழந்தை தந்தைக்கு பிறந்தது என சந்தேகித்தார் தனபால்.
 
இதனால் தனது மனைவியுடன் அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் குழந்தை என்றும் பாராமல் அதனை கொன்றுள்ளான் கார்த்திகேயன். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட கார்த்திகேயன் ஜாமீனில் வெளிவந்து தனது தந்தை தனபாலையும் கத்தியால் குத்தி கொலை செய்தான். இதையடுத்து போலீஸார் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.