1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A husband committed suicide due to wife detachment

மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் கணவன் தற்கொலை

திருவாரூர்
திருவாரூரில் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூரைச் சேர்ந்தவர் முருகானந்தம் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
 
இந்நிலையில் வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு முருகானந்தனின் மனைவி குழந்தையையும், கணவனையும் விட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஓடிவிட்டார். 
 
குழந்தையுடன் தனிமையில் தவித்த முருகானந்தம் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்ய முடிவு செய்து, பின் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். பெற்றோர் செய்த குற்றத்திற்கு 3 வயது குழந்தை அனாதையாய் தவிக்கின்றது.
அடுத்த கட்டுரையில்
ரஷியாவில் ஏற்பட்ட படகு விபத்தில் 10 பேர் பலி