1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A case filed against savukku sankar again

சவுக்கு சங்கர் மீது இன்னொரு வழக்கு.. பெண் பத்திரிகையாளர் கொடுத்த புகார்..!

சவுக்கு சங்கர்
ஏற்கனவே சவுக்கு சங்கர் மீது சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பெண் பத்திரிகையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்னொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண் காவல்துறை அதிகாரிகளை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்தது. இதனை அடுத்து அவர் மீது கஞ்சா வழக்கு பெண் சப் இன்ஸ்பெக்டர் கொடுத்த புகார் வழக்கு ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பெண் பத்திரிகையாளர் ஒருவரும் அவர் மீது புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல் துறையின் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சவுக்கு  சங்கர்   சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு 10ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
எடை குறைப்பு சிகிச்சையின் போது பலி..! மருத்துவமனையை மூட உத்தரவு..!!