தொடர்புடைய செய்திகள்
- விடியா திமுக அரசில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுகின்றனர். எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!
- சவுக்கு சங்கர் உயிருக்கு கோவை மத்திய சிறையில் ஆபத்து இருப்பதாக சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் பேட்டி!
- சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல்.. நீதிமன்றம் அனுமதிக்குமா?
- சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீதும் வழக்குப்பதிவு.. பரபரப்பு தகவல்..!
- சவுக்கு சங்கர் கைது.. பத்திரிக்கை சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கும் திமுக அரசு: சசிகலா கண்டனம்..!
சவுக்கு சங்கர் மீது பெண் சப் இன்ஸ்பெக்டர் புகார். மீண்டும் ஒரு வழக்கு பதிவு..!
பெண் காவல்துறை அதிகாரிகளை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரிந்தது.
அதுமட்டுமின்றி சவுக்கு சங்கர் காரில் கஞ்சா இருந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் அது குறித்த வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இப்போதைக்கு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக சவுக்கு சங்கர் மீது பெண் சப் இன்ஸ்பெக்டர் கீதா என்பவர் புகார் அளித்துள்ளதாகவும் இதனை அடுத்து ஆபாசமாக பேசுதல் உள்பட நான்கு பிரிவுகளில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
சவுக்கு சங்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva
