புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 மே 2024 (16:48 IST)

பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய்ப்புகார்.. பெண்ணுக்கு 1653 நாட்கள் சிறை.. லட்சக்கணக்கில் அபராதம்..!

பொய்யாக பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்த பெண்ணுக்கு 1653 நாட்கள் சிறை தண்டனை அளித்த நீதிமன்றம் லட்சக்கணக்கில் அபராதம் விதித்துள்ளது உத்தர பிரதேச மாநிலத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இளம் பெண் ஒருவர் இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்த நிலையில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்கள் 8 நாட்கள் வரை சிறையில் இருந்துள்ளார் 
 
இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அந்த பெண் பொய் வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த பெண்ணுக்கு 1653 நாட்கள் சிறை மற்றும் ரூபாய் 5.88 லட்சம் அபராதம் விதித்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பரெய்லி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது 
 
இவர் குற்றம் சாட்டிய இளைஞர் நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்கள் 8 நாட்கள் சிறையில் இருந்ததற்கு ஈடு செய்யும் விதமாக சிறை தண்டனையும் சிறைவாசம் அனுபவித்த காலத்திற்காக உபி அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை அபராதமாகவும் அந்த பெண்ணுக்கு விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran