ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (18:30 IST)

பாஜக நிர்வாகிக்கு ஹெலிகாப்டர் வாங்கி கொடுக்கப்படும்: அண்ணாமலை அறிவிப்பு..!

annamalai
பாஜக நிர்வாகிக்கு ஹெலிகாப்டர் வாங்கி கொடுக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரிய சாமியின் கார் சமீபத்தில் சேதப்படுத்தப்பட்டது. இது குறித்து சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை ’பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரிய சாமியின் சேதப்படுத்தப்பட்ட கார் கட்சி நிதியிலிருந்து சரி செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்தார் 
 
மீண்டும் சேதப்படுத்தினால் புது கார் வாங்கி கொடுக்கப்படும் என்றும் அந்த புது காரையும் சேதப்படுத்தினால் ஹெலிகாப்டர் வாங்கி கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேலும் கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் பிரபு குடும்பத்திற்கு தமிழ்நாடு பாஜக சார்பில் ரூபாய் பத்து லட்சம் நிதி உதவி செய்யப்படும் என்றும் தமிழ்நாட்டில் திமுக மட்டும் ராணுவ வீரருக்கு மரியாதை கொடுப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran