திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (13:23 IST)

பிரபல மாடல் அழகியின் 7 வருட வாழ்க்கையை சீரழித்த தொழிலதிபர்

துருக்கி நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியான நடாஷா செரிப்ரி, தொழிலதிபர் ஒருவர் தன்னை 7 ஆண்டுகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் நடாஷா செரிப்ரி. இவர் ஒரு பிரபல மாடல் அழகி. நடாஷாவிற்கு தன்னை விட வயதில் மூத்த தொழிலதிபருடன் காதல் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் நடாஷாவை கடத்திய அந்த தொழிலதிபர்,  கடந்த ஏழு ஆண்டுகளாக அவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். அவனின் பிடியிலிருந்து தப்பிக்க நடாஷா பல்வேறு முறை முயற்சித்தும் அனைத்தும் தோல்வியாகவே முடிந்திருக்கிறது.
இதனையடுத்து தொழிலதிபரின் முதல் மனைவியின் மூலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடாஷா காப்பாற்றப்பட்டார். சிகிச்சைக்காக நடாஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸார் வழக்கு பதிந்து தப்பியோடிய தொழிலதிபரை தேடி வருகின்றனர்.