திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2024 (13:26 IST)

சென்னை தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: 22 மணி நேரம் நடந்த சோதனை..!

assembly
சென்னை தலைமை செயலகத்தில் திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து இரண்டு மணி நேரம் போலீசார் தீவிர சோதனை செய்து வந்ததாகவும் அதன் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக செய்தி சேனல் ஒன்றுக்கு தகவல் வந்த நிலையில் அந்த செய்தி சேனல் தரப்பில் இருந்து காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு தகவல் அளிக்கப்பட்டது 
 
அதன் பின்னர் காவல்துறை சார்பில் வெடிகுண்டு நிபுணர்கள் தலைமைச் செயலகம் முழுவதும் சோதனை செய்தனர்.  தலைமைச் செயலகத்தின் நுழைவாசல் முதல் முக்கிய அறைகள் அனைத்தையும் சோதனை செய்யப்பட்ட நிலையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது 
 
இதனை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என  சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர், தனியார் தொலைக்காட்சிக்கு வந்த மொபைல் நம்பரை வைத்து போலீசார் விசாரிக்க தொடங்கி உள்ளதாகவும்   கடலூரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran