1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 29 பிப்ரவரி 2024 (21:39 IST)

கமலின் ''தக்லைஃப் ''ஷூட்டிங் பிரேக் ஆகாது- மணிரத்னத்தின் புத்திசாலித்தனம்!

kamal -thug life
கமலின் தக்லைஃப் என்ற  படத்தில், இயக்குனர்  மணிரத்னம்   நட்சத்திரப் பட்டாளத்தையே  நடிக்க வைத்துள்ளார்.
 
கமல்- மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் படம் தக்லைஃப். இப்படதிற்கு ரஹ்மான் இசையமைக்கிறார்.கமலுடன் இணைந்து, ஜெயம்ரவி, திரிஷா,துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது செர்பியாவில் நடந்தது. இதில், கமல், திரிஷா உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்று நடித்தனர். இதையடுத்து, அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக  செட் போடப்பட்டு, சென்னையில் இப்படத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது.
 
இதில் ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
 
விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், இதில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், இப்படத்தின்  ஹீரோவுமான கமல் அங்கு பிரசாரத்திற்கு சென்றுவிடும் சூழல்  உள்ளதால், 
 
மணிரத்னம்  புத்திசாலித்தனமாக நட்சத்திரப் பட்டாளத்தையே இப்படத்தில் நடிக்க வைத்துள்ளார்.
 
இந்த நிலையில், தேர்தல் வேலைக்காக  கமல்ஹாசன் சென்றாலும்கூட, படத்திற்கு பிரேக்விடாமல், மற்ற  நடிகர்களுக்கான போர்ஷனை எடுத்துவிட வேண்டும் என மணிரத்னம் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார் என தகவல் வெளியாகிறது.