வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 29 பிப்ரவரி 2024 (12:58 IST)

போக்குவரத்து விதிமீறல் செய்து ஃபுட் ரிவியூ- யூடியூபருக்கு அபராதம்!

chennai
போக்குவரத்து விதிமீறல் செய்த யூடியூபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் போக்குவரத்து விதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
 
போக்குவத்து விதி மீறல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவது.
 
கடந்தாண்டு நடிகர் விஜய் போக்குவரத்து விதியை மீறியதாக அபராதம் செலுத்தினார்., சமீபத்தில் கேரள முதல்வருக்கும் போக்குவரத்து விதியை மீறியதாக அபராதம் வசூலித்ததாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து விதி மீறல் செய்து, ஃபுட் ரிவ்யூ செய்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
ஃபுட் ரிவியூ செய்ய அண்ணா  நகரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இளம்பெண்ணுக்கு ரூ.1000 அபராதம் விதித்து போக்குவத்து காவல்துறை  நடவடிக்கை எடுத்துள்ளது.