1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A bee entered the students ear causing excitement

மாணவனின் காதுக்குள் தேனீ புகுந்ததால் பரபரப்பு

bee
வேலூர் மாவட்டம்  தட்டப்பாறை என்ற கிராமத்தில் தேன் எடுக்கச் சென்ற மாணவனின் காதில் தேனீ புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூங்கும்போது காதுக்குள்  எறும்புகள், பூச்சிகள், வண்டுகள், புகுவதைப் பார்த்திருப்போம். கடந்தாண்டு  செப்டம்பரில் பெண் ஒருவரின் காதில் பாம்பு நுழைந்துவிட்டதாக ஒரு வீடியோ வெளியாகி பரவலானது.

இந்த நிலையில்,  வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை என்ற கிராமத்தில் தேன் எடுக்கச் சென்ற மாணவனின் காதில் தேனீ புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை என்ற கிராமத்தில் தேன் எடுக்கச் சென்ற 10 ஆம் வகுப்பு மாணவனின் காதுக்குள் தேனீ புகுந்துவிட்டது. இதனால் வலியால் துடித்த மாணவரைன் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள்  மாணவனின் காதில் இருந்த தேனீயை உயிருடன் வெளியே எடுத்தனர். மேலும், 2 சிறுவர்கள் தேனீ கொட்டியதற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
துக்ளக் குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம்