1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (20:08 IST)

லியோ படத்திற்காக திரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். 
 
மேலும் , இவர்களுடன்  சஞ்சய் தத் , அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது அங்கு திட்டமிட்டபடி ஷூட்டிங் முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.
 
அதையடுத்து சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு நடித்தனர். ஆனால், ரசிகர்கள் முந்தியடித்ததால் ஹத்ராபாத்தில் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனுக்காக பெர்மிஷன் வாங்கி அந்த வேளையில் பிசியாக இருக்கிறார். 
 
இந்நிலையில் த்ரிஷா லியோ படத்தில் நடிக்க ரூ.  4 கோடியில் இருந்து 5 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். இவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ரூ. 3 கோடி  சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.