1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2023 (16:42 IST)

திருமணமான காதலிக்கு தொல்லை ...இளைஞர் கல்லால் அடித்துக் கொலை

telungana
தெலுங்கானா மாநிலத்தில்  காதலிக்கு திருமணம் ஆக பின்னும் தொல்லை கொடுத்து வந்த லாரி ஓட்டுனர் பட்டப்பகலில்  கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இம்மாநிலம் மஞ்சிரியாவாலா மாவட்டம் இந்தரம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் கனகய்யா. இவர் மனைவி பத்மா. இத்தம்பதியர்க்கு 2 மகள்கள், 1 மகன்  உள்ளனர்.

 மூத்த மகளும் அதேபகுதியைச் சேர்ந்த மகேஷ் (240 என்ற நபரும் காதலித்து வந்தனர். இவர்கள் காதலித்தபோது, வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிலையில், கடந்தாண்டு அப்பெணுக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெற்றது.
இருப்பினும் மகேஷ் அப்பெண்ணுக்கு தொடர்ந்து செல்போனில் தொல்லை கொடுத்து வந்ததுடன், அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களைக் காட்டி மிரட்டி வந்துள்ளார்.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்த அப்பெண்ணின் கணவன் கடந்த  மாதங்களுக்கு முன்பு அப்பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த  நிலையில், மகேஷ் தன் இருசக்கர வாகனத்தில் அப்பெண்ணின் வீட்டிற்கு முன் வந்துள்ளார். அவரை வழிமறீத்து தாக்கிய பெண்ணின் குடும்பத்தினர் 4 பேர் அவர் மீது கல்லை தூக்கிப் போட்டு கொன்றனர்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.