திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (16:24 IST)

அசிங்கப்படுத்திடாதீங்கடா டேய்... வீரம் படத்தை தொடர்ந்து இந்தியில் ரிமேக் ஆகும் பரியேறும் பெருமாள்!

தமிழ் சினிமாவில் சாதிய அதீகத்தை மையப்படுத்தி வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் பரியேறும் பெருமாள். 2018 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தை பா ரஞ்சித் தயாரித்திருந்தார். இதில் ஹீரோவாக கதிர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றார். 
 
ஹீரோயினாக கயல் ஆனந்தி நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் நிறைய விருதுகளை அள்ளியது. இந்நிலையில் தற்போது இப்படத்தை இந்தியில் பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோகர் ரீமேக் செய்கிறார். 
 
அதற்கான வேளைகளில் மும்முரமாக இறங்கியுள்ள படக்குழு இப்படத்தில் சித்தாந்த் சதுர்வேதி மற்றும் திரிப்தி டிம்ரி ஆகியோர் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் அஜித்தின் வீரம் இந்தி ரிமேக்கில் சல்மான் கான் நடித்து அட்டர் பிளாப் ஆனது குறிப்பிடத்தக்கது. அதனால் நல்ல படங்களை எடுத்து பெயரை கெடுக்காதீங்க ப்ளீஸ் என கோலிவுட் பேன்ஸ் கோரிக்கை வைத்துள்ளனர்.