1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 9th std student molested 7 year old girl in delhi

7 வயது சிறுமி தொடர் பாலியல் பலாத்காரம் : 9ம் வகுப்பு மாணவிகள் கைது

Delhi
2ம் வகுப்பு படிக்கும் சிறுமியை, 9ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 2 பேர், கூட்டாக சேர்ந்து, மாதக் கணக்கில் பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
டெல்லியில் உள்ள மோதி நகரில் உள்ள சர்வோதயா கன்யா வித்யாலயா பள்ளியில் படித்து வரும் மாலதி என்ற சிறுமி, சமீபத்தில் தனது பெற்றோர்களிடம் கூறிய செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
அதாவது, அதே வகுப்பில் 9ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகள், மாதக் கணக்காக, தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறியிருக்கிறாள். அதாவது, மதிய உணவு இடைவேளையில், யாரும் இல்லாத ஒரு அறைக்கு அழைத்து சென்று, ஆடைகளை களைந்து தன்னை கண்ட இடத்தில் தொட்டு பாலியல் பலாத்காரம் செய்து வருவதகாவும், இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொன்று விடுவோம் என அந்த சிறுமிகள் மிரட்டி வந்ததாகவும் கூறியிருக்கிறாள். 
 
இதுகேட்டு அதிர்ச்சியடைந்த மாலதியின் பெற்றோர்கள், இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், கடந்த 4 மாதங்களாக அவர்கள் மாலதியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரிய வந்தது. மேலும், மாலதிக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.
 
இதையடுத்து, அந்த இரு மாணவிகளையும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதில் ஒரு சிறுமி மேஜர் இல்லாத காரணத்தில் சமுதாய சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டார். மற்றொரு மாணவிக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
விலங்குகளுக்கு தனி மேம்பாலமா? அதிர்ச்சியளிக்கும் நாடுகள்