செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (11:45 IST)

பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற சிறுமி: விசாரணையில் வந்த அதிர்ச்சி தகவல்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நள்ளிரவு வரை தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியை விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.

திருப்பூர் பகுதியைச் சேர்ந்த, 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் வெகு நேரமாக ஒரு நபருக்காக காத்துகொண்டிருந்தார். நள்ளிரவு வரை தனியாக காத்திருந்ததால் அந்த சிறுமியை அங்குள்ள நபர்கள் ஆபாச சைகைகளை கட்டி துன்புறுத்தியுள்ளனர். இதனை கண்ட ஒருவர் அந்த சிறுமியை போலீஸில் ஒப்படைத்தார். அந்த சிறுமியை விசாரித்த போலீஸாருக்கு ஒரு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமி மதுரைக்கு ரயிலில் பயணம் செய்தபோது, திண்டுக்கலைச் சேர்ந்த இளைஞரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர அந்த சிறுமியை கண்டித்துள்ளனர்.
ஆனால் அந்த சிறுமிக்கு அந்த இளைஞரை மறக்க முடியவில்லை. இதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அந்த இளைஞரை வேண்டியுள்ளார்.

உடனே இளைஞர் அந்த சிறுமியை திண்டுக்கலுக்கு வரச்சொல்லியுள்ளார். அந்த சிறுமியும் திண்டுக்கலுக்கு கிளம்பி வர, அந்த சிறுமியை பேருந்து நிறுத்ததிலேயே இருக்க சொல்லிவிட்டு தனது பெற்றோரிடம் சம்மதம் வாங்கி வருவதாக கூறி அந்த இளைஞர் சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு தாண்டியும் அந்த இளைஞர் வரவில்லை. இதனை கேட்ட போலீஸார் அதிர்ந்து போயினர். அந்த இளைஞரின் செல்ஃபோன் எண்ணை வைத்து அவரை கண்டுபிடிக்க போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.