ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (09:34 IST)

சக நோயாளிகளை அடித்தே கொன்ற நபர்: மருத்துவமனையில் பயங்கரம்

மருத்துவமனையில் போதைக்கு அடிமையான நபர், சக நோயாளிகள் 4 பேரை கம்பியால் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூமேனியாவில் உள்ள ஒரு நரம்பியல் மனநல மருத்துவமனையில், போதைக்கு அடிமையான ஒரு நபர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென குளுகோஸ் ஏற்ற பயன்படுத்தும் இரும்பு கம்பியை எடுத்து சக நோயாளிகளை சரமாரியாக தாக்க ஆரம்பித்தார்.

இதில் நான்கு நோயாளிகள் படுக்கையில் இருந்தபடியே உயிரிழந்தனர். மேலும்  9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த 9 பேரில் இருவர் கோமா நிலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

நோயாளிகளை தாக்கியதும் தப்பித்துச் செல்ல முயன்ற நபரை, போலீஸார் உடனடியாக கைது செய்தனர். இது குறித்து அந்த மருத்துவமனை அதிகாரி வியோரிகா, “ அந்நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மிகவும் சாதாரன நிலையிலேயே இருந்தார். ஆனால் இவ்வாறு ஒரு சம்பவம் நடக்கும் என எதிர்ப்பார்க்கவே இல்லை” என கூறியுள்ளார்.