திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 13 அக்டோபர் 2022 (11:42 IST)

இன்று எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு? வானிலை அப்டேட்!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வானிலை ஆய்வு நிலையத்தின் அறிவிப்பின்படி இன்று அதாவது செப்டம்பர் 13 ஆம் தேதி 9 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளன. மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கூடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited By: Sugapriya Prakash