தொடர்புடைய செய்திகள்
- ஒரு நாள் மழைக்கே சென்னை தாங்கவில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் |
- இன்று தொடங்கியது விக்ரம்- பா ரஞ்சித் படத்தின் டெஸ்ட் ஷூட்!
- மாடியில் இருந்து தவறி விழுந்த 2வயது குழந்தை...அதிர்ச்சி சம்பவம்
- இன்னும் 5 நாட்களுக்கு கனமழை… இன்று 16 மாவட்டங்களில்..!!
- சென்னையில் மீண்டும் சரிந்த தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!
16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது
இந்த நிலையில் வானிலை ஆய்வு நிலையத்தின் அறிவிப்பின்படி இன்று அதாவது செப்டம்பர் 13-ஆம் தேதி 16 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளன. 16 மாவட்டங்கள் பின்வருமாறுள் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர்
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
