1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (18:51 IST)

தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 50க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மட்டும் சென்னையில் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 1596 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது
 
இன்று குறைவால் பாதிக்கப்பட்ட 76 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 55 பேர் என்றும் அவர்கள் 26 பேர் பத்திரிக்கையாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இன்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளதால், தமிழகத்தில் மொத்தம் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து இன்று 178 பேர் குணமாகி உள்ளதால் தமிழகத்தின் மொத்த குணமாணவர்களின் எண்ணிக்கை 635 வேண்டும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வந்த போதிலும் கொரோனாவால் தினமும் 50 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது