செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (18:43 IST)

கொரோனா நிவாரண நிதி - ரூ.160.93 கோடி பெறப்பட்டுள்ளது - முதல்வர் டுவீட்

தமிழகத்தில் கொரோன தொற்றைத் தடுக்க வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஏழை எளிய மக்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், பலரும் பசி , பட்டிணியால் வாடுகின்றனர். இவர்களுக்கு அரசும், பல்வேறு சேவை நிறுவனங்களும் மக்களும் உதவி வருகின்றனர்.

இந்நிலையில், இதுவரை தமிழக முதல்வரின் நிவாரணத் தொகைக்கு ரூ. 160 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரத்து 572 ரூபாய் வந்துள்ளதாக தமிழக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

கொரோனா வைரஸ் தடுப்பு, நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 160 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரத்து 572 ரூபாய் ஆகும்.

கொரோனா நிவாரணத்திற்காக மனமுவந்துநிதியுதவி அளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.