திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 11 நவம்பர் 2017 (22:09 IST)

742 வழக்கறிஞர்கள் பணி செய்ய தடை

பிளஸ் 2  கூட முடிக்காமல் லெட்டர் பேட் கல்லூரிகளில் சட்டப்படிப்பை முடித்தவர்கள் கூட வழக்கறிஞர்களாக பணிபுரிவது குறித்த குற்றச்சாட்டின் பின்னர், பள்ளிச் சான்றிதழை சரிபார்த்த பிறகே தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.


 


இந்த நிலையில் திறந்த வெளிபல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்த 742 வழக்கறிஞர்கள் பணி செய்ய அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் அனைவரிடமும் விளக்கம் கேட்டுள்ள நிலையில் நோட்டீஸ் மீது முடிவு எடுக்கும் வரை வழக்கறிஞராக பணிபுரிய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.