நீதிமன்ற வளாகத்திலேயே மீறப்படும் நீதிமன்ற உத்தரவுகள்
உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர்கள், கட்-அவுட்டுக்கள் வைக்க சமீபத்தில் சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து ஒருபுறம் மாநில அரசு மேல்முறையீடு செய்திருந்தாலும் இந்த தடை உத்தரவு தற்போது அமலில் உள்ளது என்பதுதான் உண்மை
இருப்பினும் நீதிமன்ற உத்தரவை மீறி அரசு விழாக்கள் உள்பட பல இடங்களில் பேனர்கள், கட்-அவுட்டுக்கள் வைகக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை நீதிமன்ற வளாகத்திலேயே இந்த உத்தரவுகள் பின்பற்றப்படாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் தலைவர்களின் பேனர்கள் உள்ளது.
இதில் ஒரு பெரிய கூத்து என்னவெனில் இந்த பேனர்களை வைத்ததே வழக்கறிஞர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பேனர்கள் தடை உத்தரவுக்கு முன்பே இந்த பேனர்கள் வைக்கப்பட்டது என்றாலும் இந்த உத்தரவு பிறப்பித்து இரண்டு நாட்கள் ஆகியும், இந்த பேனர்கள் அகற்றப்படாமல் இருப்பது நீதிமன்ற உத்தரவுக்கு எந்த அளவுக்கு மதிப்பளித்து வருகிறார்கள் என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது.