பாஜகவின் தனிப்பிரிவாக வருமானவரித்துறை செயல்படுகிறது: வழக்கறிஞர் காசிநாதபாரதி
இன்று காலை முதல் சசிகலா குடும்பத்தினர்களுக்கு சொந்தமான ஜெயா டிவி உள்பட பல்வேறு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனைக்கு போயஸ் கார்டன் வீடும், கொடநாடு எஸ்டேட்டும் தப்பவில்லை
இந்த நிலையில் பாஜகவின் தனிப்பிரிவாக வருமானவரித்துறை செயல்பட்டு வருவதாக தினகரன் ஆதரவாளரும் வழக்கறிஞருமான காசிநாதபாரதி சற்று முன்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் எங்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்கள், வருமான வரித்துறை சோதனை மூலம் மிரட்டி பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வருமான வரித்துறை சோதனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று கூறிய வழக்கறிஞர் காசிநாதபாரதி மத்திய அரசுக்கு எதிராக அரசியல் செய்பவர்கள் மீது சோதனை மூலம் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.