திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 22 ஜூன் 2024 (14:42 IST)

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!

Dmk Mlas
கள்ளச்குறிச்சி சம்பவத்தில் தங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார் என திமுக எம்.எல்.ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
 
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர்கள், கள்ளக்குறிச்சி உயிரிழப்புகளை நேரில் பார்வையிட வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேசாமல் திமுக மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்ததாக தெரிவித்தனர்.
 
அதிமுக ஆட்சியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கள்ளச்சாராய சம்பவங்களைப் பற்றி எல்லாம் வாய் திறக்காத ராமதாஸ், தங்கள் மீது குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் என்றும் அவர் சொல்லும் குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது வாழ்வில் இருந்து நாங்கள் வெளியேறுகிறோம் என்றும் கூறினர்.

 
குற்றச்சாட்டை நிரூபிக்க தவறினால்  அரசியலில் இருந்து விலகுவார்களா? என்று கேள்வி எழுப்பிய திமுக எம்.எல்.ஏக்கள், பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், கட்சி தலைவர் அன்புமணிக்கும் கண்டனம் தெரிவிப்பதாக கூறினர். இது தொடர்பாக அவர்கள் இருவர் மீதும் மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாக திமுக எம்.எல்.ஏக்கள் தெரிவித்தனர்.