1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 29 நவம்பர் 2021 (15:15 IST)

சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட எதிர்கட்சிகள்! – கூட்டத்தொடர் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி சில நிமிடங்களிலேயே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தது முதலாக நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டிஜிட்டல் கரன்சியை கட்டுப்படுத்தும் புதிய சட்ட மசோதா உள்ளிட்டவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற கூட்டம் தொடங்கிய நிலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு கூச்சலும், குழப்பமும் தொடர்ந்ததால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.