1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 6000 qubic meter water released from chembarapakkam lake

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6,000 கன அடி நீர் திறக்க முடிவு..பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

செம்பரம்பாக்கம்
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 2500 கன அடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருப்பதால் 6000 கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் கடந்து சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 2500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீரின் வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து  6 ஆயிரம் கன அடி நீர் திறக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இன்று காலை 8 மணி முதல் 6000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதாகவும் எனவே  தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அரசு பஸ்களில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி.. ஜனவரி முதல் அமல்..!