பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தவிர்ப்பு, காஞ்சிபுரம் பண்ணை வீட்டில் ஓய்வெடுக்கும் ஸ்டாலின்

VM| Last Modified வெள்ளி, 1 மார்ச் 2019 (12:21 IST)
இன்று தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்துவிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையை விட்டு ஒதுங்கி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பண்ணை வீட்டில் ஓய்வெடுக்க சென்றுவிட்டாராம். 
திமுக தலைவர் ஸ்டாலின் ஒவ்வாரு பிறந்த நாளின் போதும், கருணாநிதி-தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெறுவார். இந்த  ஆண்டு கருணாநிதி உயிருடன் இல்லை. இந்த வருத்ததை ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் வெளிப்படுத்தியுள்ளார். வழக்கமாக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளுடன் பிறந்த நாளை கொண்டாடும் ஸ்டாலின், இந்த ஆண்டு கருணாநிதி உயிருடன் இல்லாததால் பிறந்த நாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை. இதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு முறை பேட்டியிலேயே அவர் கூறியிருந்தார்.
 
மேலும் "என் பிறந்த நாள் விழா எனும் பெயர் ஆடம்பர விழாக்களை தவிர்த்துவிட்டு, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நல திட்ட உதவிகளை வழங்க வேண்டும்" என்றும் தொண்டர்களுக்கு அறிக்கை மூலம் வேண்டுகோளும் விடுத்திருந்தார் .
 
இந்நிலையில் இன்று பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்காக பலரும் சென்னைக்கு வந்து ஸ்டாலினை சந்திக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் அன்பு தொல்லைகளை தவிர்ப்பதற்காக ஸ்டாலின் சென்னையை விட்டு வெளியே செல்ல முடிவு எடுத்தாக கூறப்படுகிறது.
 
அதற்காக குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தன் பண்ணை வீட்டிற்கு ஸ்டாலின் சென்றுவிட்டாராம். அங்குதான் குடும்பத்தினருடன்  இன்றைய பொழுதை கழிக்கும் ஸ்டாலின்  இன்று மாலை சென்னை திரும்ப உள்ளாராம்.


இதில் மேலும் படிக்கவும் :