1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 மார்ச் 2019 (11:00 IST)

பிரசவத்தின் போது குழந்தை தலை துண்டானது: கூவத்தூரில் அதிர்ச்சி!!!

காஞ்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொம்மி என்ற பெண் நேற்று பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டாக, குழந்தையின் உடல் பகுதி மட்டும் தாய் வயிற்றில் சிக்கிக்கொண்டது.
 
இதையடுத்து அந்த பெண் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்த பெண்ணின் வயிற்றிலிருந்து குழந்தையின் உடல் பகுதி எடுக்கப்பட்டது.
 
மருத்துவர்களுக்கு பதில் செவிலியர்கள் பிரசவம் பார்த்தாலேயே இந்த விபரீதம் நடைபெற்றிருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து பொம்மிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் அலட்சியத்தில் ஒரு குழந்தையின் உயிர் பறிபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.