வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 28 ஏப்ரல் 2021 (15:54 IST)

சென்னையில் 50 விமானங்கள் ரத்து…

சென்னையில் இன்று போதிய பயணிகள் இல்லாததால் முக்கிய பகுதிகளுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்களைத் இத் தொற்றிலிருந்து காக்க மத்திர அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இரவு நேர ஊடரங்கு அமலில் உள்ளது.

இன்று சென்னை விமான நிலையத்தில்  போதிய பயணிகள் இல்லாத காரணத்தா ஐதராபாத் செல்லும் 5 விமானங்கள், புதுதில்லி செல்லும் 3 விமானங்கள், கோவை செல்ல இருந்த3 விமானங்கள், பெங்களூரு செல்ல இருந்த 3 விமானங்கள், மும்பை செல்ல இருந்த 2 விமானங்கள்  ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், மதுரை, கொல்கத்தா,கொச்சி, ராஞ்சி, அகமதாபாத், சிலிகுரி, இந்தூர், கோவா உள்ளிட்ட 25 நகரங்களுக்குப் புறப்படும்  விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று சென்னைக்கு திரும்பி வரவிருந்த 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.