வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 ஏப்ரல் 2021 (09:11 IST)

இப்பவே சொல்லிட்டோம் இது நிரந்த பணியில்லை! – செவிலியர் பணிகளுக்கு சென்னையில் அவசரம்!

சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் பணிக்கான விளம்பரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் சென்னையில் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக செவிலியர்கள், மருத்துவ அலுவலர்கள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 150 மருத்துவ அலுவலர்கள் மற்றும் 150 செவிலியர்களுக்கான தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு சென்னை மாநகராட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்த பணி முற்றிலும் நிரந்தரமானதே என்றும் எக்காரணம் கொண்டும் பணி நிரந்தரம் செய்யப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.