வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 மே 2024 (12:54 IST)

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

assembly
உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை உறுதி செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் 2016-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு காரணமாக பொறியியல், கலை, அறிவியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட அனைத்து வகையான படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இட ஒதுக்கீடு கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளிடம் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது.

Edited by Mahendran