திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 18 ஏப்ரல் 2024 (16:16 IST)

அமெரிக்காவில் ஆந்திரா மாணவிகள் இருவர் கைது.. சூப்பர் மார்க்கெட்டில் திருடினார்களா?

சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் எடுத்துவிட்டு பணம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு காரணமாக அமெரிக்காவில் இரண்டு ஆந்திரா மாணவிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்காவில் நியூஜெர்சியில் கல்வி பயிலும் 20 மற்றும் 22 வயதுடைய ஆந்திர மாணவிகள் ஒரு கடையில் பணம் செலுத்தாமல் பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியே முயற்சி செய்ததாகவும் அப்போது எச்சரிக்கை மணி ஒலித்ததை அடுத்து அந்த இரண்டு மாணவிகலை சோதனை செய்தபோது அவர்கள் பணம் கொடுக்காமல் பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றதாகவும் தெரிகிறது 
 
இதனை அடுத்து உடனடியாக போலீசார் வரவழைக்கப்பட்ட நிலையில் கடைகள் திருடுவது குற்றம் என்றும் மாணவிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் மாணவிகளிடம் காவல்துறையினர் தெரிவித்தனர் 
 
இதனை அடுத்து அந்த மாணவிகளின் ஒருவர் பொருட்களுக்கு இரண்டு மடங்கு பணம் தருவதாக கூறி கெஞ்சியபோதும், போலீசார் அவர்களிடம் விளக்கம் கேட்காமல் கைது செய்ததாக தெரிகிறது 
 
இந்த நிலையில் இருவரும் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதாகவும் விரைவில் அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது., 

 
Edited by Siva